கால திரைக்கு அப்பால் Jeffersonville, Indiana, USA 61-0305 1உங்களுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கப் பட்டிருக்கிறது என்று அறிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அநேக வருடங்களுக்கு முன்பாக, நான் முதலாவதாக ஊழியத்தை ஆரம்பித்தபோது, கூட்டங்கள் அவ்விதமாக இருந்தது. என்னால் முடியவில்லை .... கூட்டத்தின் அடிப்படை வசதியை பெற்றுகொள்ள, ஜனங்ளை உட்காரவைப்பதற்கு கூட முடியாத ஒரு நிலையில், இடங்களை நிரப்பிக்கொள்ள மூன்று மணிக்கே வந்து வடுவார்கள். மற்ற எல்லா காரியமும் அங்கே சரியாயிருந்தது. ஒருவரையும் உள்ளே அனுமதிக் காமல் அவர்கள் வாசல்களை அடைத்து விட வேண்டியதாய் இருந்தது. ஏழு மணிவரை நாங்கள் அங்கே போக முடியாதநிலை. பாருங்கள்? எல்லா இடங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் நிரம்பியிருந்தார்கள்...... கடைசியாக நடந்த கூட்டத்தின் ஐந்து இரவுகளை நான் எடுத்துக்கொண்டு, வார்த்தையை சுற்றிலும் கட்டி எழுப்பி, வார்த்தையினுடைய வல்லமை எப்படிப்பட்டதென்று தெளிவாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்தோம். பாருங்கள்? ஏனென்றால் வார்த்தை தேவனாயிருக்கிறது. பாருங்கள்? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. 2இப்பொழுது எபிரேயர் 4 சொல்லுகிறது, தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்தை காட்டிலும் கருக்கானதாய் இருக்கிறது. பாருங்கள்? தேவனுடைய வார்த்தை எதைக்காட்டிலும்..... ஊனையும், எலும்பையும் உருவகுத்துகிறதாயும், இருதயத்தின் யோசனை களையும், நினைவுகளையும் வகையருக்கிறதாயும், இருக்கிறது. பாருங்கள்? அதுதான் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது ஒருவரம் இருந்து, அங்கு நம்மை நாமே தளர்த்திக்கொள்ளக் கூடுமானால், அது வார்த்தை மாத்திரமே, அது கிறிஸ்து வார்த்தையாயிருப்பது, நமக்குள்ளாக வந்து நம்முடைய யோசனைகளை வகையருக்கிறது. நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்கள். பாருங்கள்? எப்படிப்பட்டதான அற்புதம். பிறகு அவர் என்ன செய்தார் என்பதை பார்க்கவும், எவ்விதமாக நம்மை ஆசீர்வதித்திருக் கிறார்.... அதன் பிறகு............. நான் இரவுகளாக அந்த வார்த்தையை சுற்றி கட்டி எழுப்பப்படுகிறதை நான் உணரும்படியாகவும்... ஜனங்களை அமைதலுக்குட்படுத்தி சற்று தளர்ச்சியாக இருக்கும்படியாகவும், பரிசுத்த ஆவி யானவர் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஜனங்களை அழைத்து காரியங்களை செய்தார். 3அதன் பின்பு கடைசி இரவன்று, கடந்த ஞாயிறு பிற்பகல், அமெரிக்காவில் நான் இதுவரை பார்த்திராத ஒரு மகத்தான சுகமளிக்கும் வரிசையை நான் பார்த்தேன். பாருங்கள்? அவர்கள் அவ்விதமாக....நான் பில்லியிடம் நூறு ஜெப அட்டைகளை கொடுத்து கீழே அனுப்பினேன். ஜீனை நூறு அட்டைகளுடனும், லியோவை நூறு அட்டைகளுடனும், ராயை நூறு அட்டைகளுடனும், ஏறக்குறைய ஐந்நூறு ஜெப அட்டைகளை எல்லோரிடமும் கொடுக்கும் படியாக அனுப்பினேன். அதன் பின்பு வார்த்தையானது அவர்களை பற்றிபிடித்துக்கொண்டு, அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து, பின்பு அந்த வார்த்தையின் மீது தரித்திருந்து, மேடைக்கு அவர்களை அழைத்து வந்து, மேடைக்கு வருவதற்கு முன்பாகவே ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுடைய கக்க தண்டங்களையும் மற்றவைகளையும் தூக்கி எரிந்துபோட்டு சுகத்தை பெற்றுக்கொண்டார்கள். சற்று அதை பார்க்கும்படி....பாருங்கள்? தேவனுடைய வார்த்தையானது அங்கே கடந்து சென்று, அந்த ஐந்து செய்திகள் அல்லது நான்கு செய்திகளின் மூலமாக, அவர்கள் முழு மனதோடும் அதை விசுவாசிக்கு மட்டாக, அவர்களுடைய இருதயங்களில் வார்த்தையானது தன்னை தானே இளைப்பாற்றி கொண்டது. ஏதோ ஒரு சிறிய தொடர்பை பெற்றுகொள்வது மாத்திரமே அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. (பாருங்கள்?) ஏதோ ஒன்று அல்லது வேறொன்று. அது ஒரு உண்மையாயிருந்தது. மேடையை கடந்து செல்வதற்கு முன்பாகவே, மேடையில் அவர்கள் கால்கள்பட்ட மாத்திரத்தில், அவர்கள் சரியாக அங்கே தானே சுகமாக்கப்பட்டார்கள். 4சகோதரனே, நான் விசுவாசிக்கிறேன், இங்கே. உங்களெல்லோருக்கும் சகோ.எட் ஹுப்பரை தெரியும், உங்களுக்கு தெரியுமில்லையா? நீங்கள் ஆர்கன்ஸாஸின் கீழ் பகுதியிலிருந்து வந்திருக்கிறீர்கள் இல்லையா? அவர் என்னை சந்தித்தார்.... என்னுடைய ஆரம்ப ஊழியத்தின், ஆரம்பபகுதியில் அவர் என்னோடிருந்தார். “இது பழைய காலத்தை போலிருக்கிறது” “அநேக வருடங்களுக்கு முன்பு அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப்போல இது இருக்கிறது” என்று அவர் சொன்னார். நோய்க்கட்டி இருந்த ஜனங்கள் அப்பொழுது இருந்தார்கள். திரும்பி வரும்போது சுகமாக்கப்பட்டவர்களாக திரும்பி வருவார்கள். குருடர், செவிடர், ஊமையர் இப்படியாக எல்லாவிதமான காரியங்களும் இருந்தவர்களை கர்த்தர் சுகப்படுத்தினார். ஜனங்களை தொடக்கூட அவசியமில்லாதிருந்தது. வார்த்தையானது புறப்பட்டு சென்று அதை செய்தது. பின்பு கர்த்தர் எனக்கு ஒரு செய்தியை கொடுத்தார். நான் திரும்பி வந்த பிறகு எனக்கு தருணம் கிடைக்கும் போது ஒரு சமயத்தில் சபையில் அதை குறித்து பேசவிரும் புகிறேன். இப்பொழுது நான் மிகவும் அச்சம் தரக்கூடிய அளவிற்கு அலுவலாயிருக்கிறேன். நான் மறுபடியுமாக நாளை இந்த இடத்தை விட்டு கடந்து செல்ல வேண்டும். இந்த பெண் வருவதற்காக காத்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் நான் என்னுடைய கைப்பெட்டியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, அங்கு வேறு யாரோ இருந்தார்கள். அதினிமித்தமாக அங்கு என்னால் அதிக நேரம் தரித்திருக்க முடியவில்லை, பாருங்கள்? நான் அங்கு இருந்திருந்தும் கூட என்னுடைய குடும்பத்தினரிடமும்கூட நான் பேசமுடிய வில்லை, பாருங்கள்? மேலும் அது மிகவும் இறுக்கமான நிலை. கர்த்தர் எனக்கு உதவி செய்யும்படியாக எனக்காக உங்களெல்லோருடைய ஜெபங்களையும் நான் மன்றாடி கேட்கிறேன். 5இப்பொழுது நம்முடைய சகோதரனை பாருங்கள், உண்மையாகவே அவர் வியாதிபட்டவராய் இந்த கட்டிலின் மேல் படுத்திருக்கிறார். மேலும் நாம்..... நாம் லூயிவில்லுக்கு செல்லும்படியாக..... இன்னும் சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ ஒருவர் வந்துக்கொண்டிருக்கிறார். பதினெட்டு வயதிற்கு அதிகமில்லாத ஒரு வாலிப ஸ்திரீக்காகவும் உங்களுடைய ஜெபங்களில் நினைவு கூரும்படியாக நான் விரும்புகிறேன். அவள் இரட்டையராக இருக்கிறாள். மற்ற பெண்கள் அவளைக் குறித்து இவ்விதமாக பேசுவதுண்டு. அந்த இரண்டு பெண்களும் எவ்விதமாக இருந்தார்கள். எந்தவிதமான வாழ்கையை தவறவிட்டுக் கொண்டிருக் கிறார்கள். மேலும் மற்ற பெண்களைப் போல அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்த வேண்டும். ஒரு பெண்ணால் அதை மேற்கொள்ள முடிந்தது. இந்த மற்றொருத்திக்கு புரிந்துக்கொள்ள முடியாத நிலை, மேலும் அதை குறித்து மிகவும் தவறாக உணர்ந்தாள். அவ்விதமாகவே சென்று கொண்டிருந்தாள். அதற்குள்ளாக இன்னும் அதிகமாக இழுக்கப்பட்டு பின்னோக்கி வந்து, அதை குறித்து கவலைக்குரியவளானாள். கடைசியில் அவள் சிந்தை தடுமாறி போனது. மேலும் அவர்கள்.... அவள் ஒரு புத்தி சுயாதீனமற்ற வார்டில் இருக்கிறாள். அவளுடைய தாயும், தகப்பனும் க்ரேன்டால் இந்தியானாவிலிருந்து சற்று முன் பகுதியில் இருந்து வந்தார்கள். இந்த நிறுவனத்தி லிருந்து மேடிஸன் என்ற இடத்திற்கு நாளை அவளை அனுப்பும்படியாக முயற்சிக்கப் போகிறார்கள். 6இப்பொழுது, அந்த பெண் ....சரீரப் பிரகாரமான எந்த உடல் நலக்குறைவும் அந்த பெண்ணிடத்தில் இல்லை. அவளுக்கு சரீரப்பிரகாரமாக ஒன்றுமில்லை . அவள் முழுவது மாக சுகதேகியாயிருக்கிறாள், ஆனால் அதை விளக்கு வதற்கு கடினமாக இருக்கிறது. மேலும் அதை உண்மை யாகவே விளக்கவே முடியாது. நல்லது, அது என்னவா யிருக்கிறது, அவளுடைய ஆவியானது அலைந்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது நீங்கள் அவளுடைய ஆவியைப் பற்றிப்பிடித்து, அந்த இடத்திற்கு திரும்பவுமாக அதை கொண்டு வரவேண்டும். பாருங்கள், அங்கே....அங்கே சரீர அமைப்புகள் எவ்வித மாக இயங்குகிறது என்பதை குறித்து சில வாரங்களுக்கு முன்பாக நாம் இங்கு பேசிக் கொண்டிருந்தது போல, எவ்விதமாக ஐந்து புலன்களின் மூலமாக சரீரத்திற்குள் நுழைய முடிகிறது. அதன் பின்பு உள்ளே ஐந்து புலன்கள் என்று நாம் அழைக்கிறோம், ஐந்து புலன்கள் அவையாவன, மனசாட்சி, கற்பனை இன்னும் மற்றவைகளின் மூலமாக ஆத்துமாவுக்குள்ளாக நாம் நுழைகிறோம். அதன் பின்பு ஆவிக்குள்ளாக நாம் நுழையும் போது, அங்கு ஒரே ஒரு புலன் மாத்திரமே இருக்கிறது. அதுவும் நாமாகவே அதற்குள் நுழையும் போது, மனிதன் எவ்விதமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தானோ, அந்த அடிப்படைக்கு அது கொண்டு செல்லும். 7நீங்கள் அதை ஏற்றுகொள்ள வேண்டும் அல்லது ஆத கடந்து போக விட்டுவிட வேண்டும். நீங்கள் இன்னுமாக அந்த மரத்தினருகில் இருக்கிறீர்கள். அதில் ஒன்று ஜீவன் மற்றொன்று மரணம். ஓவ்வொரு மானிடப் பிறவியும் அந்த மரத்தினருகில் கொண்டு வரப்படுகிறார்கள். இல்லை யென்றால் அங்கு ஒரு மரத்தை வைப்பதற்கு தேவன் அநீதியுள்ளவராய் இருப்பார். அதன் பின்பு இன்னொருவருக்கு சமமாக தருணத்தை கொடுக்காவிட்டால், எது சரி, எது தவறு என்று எப்படி அறிந்துக்கொள்ள முடியும். நாம் ஒவ்வொருவரும் அந்த தருணத்தை பெற்றிருக்கிறோம். அவற்றிலும் கூட, அந்த ஆவியில்..... நாம் சுகமாக்கப்பட முடியும் அல்லது சுகமாக்கப்படாமலிருக்கவும் முடியும். இப்பொழுது அது இல்லை, ஏனென்றால் அது அங்கு இல்லை. தேவனுடைய வழியின் படியாக நாம் சுகமாக்கப்பட முடியவில்லை. அது நம்மிடத்தில் இருக்கிறது, ஏனென்றால் உடன்படிக்கை என்பது நிபந்தனையற்றது. அவர் ஏற்கனவே நம்முடைய சுகத்தை கிரயம் செலுத்தி வாங்கிவிட்டார். ஆதலால் சுகமென்பது நமக்காக மாத்திரமே, அது நம்முடையது. இப்பொழுது ஒரு வேளை நாம் அந்த புலன்களை எடுத்துக்கொண்டு விசுவாசிக்க முடியும் அல்லது அந்த புலன்களை,எடுத்துக்கொண்டு விசுவாசியாமலிருக்கவும் முடியும். இப்பொழுது அங்கு ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கிறது. அந்த ஒரு வழியில் நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நடக்க முடியும். 8இப்பொழுது இந்த பிள்ளை அழகானவள், தாயாரின் பெண் சிநேகிதி. நான்....என்னுடைய..... என்னுடைய பெண் சிநேகிதியில் ஒருவளாய் இருக்கிறாள். அவளுடைய தாயார் ஒரு சிறிய அருமையான ஸ்திரீ. ஒரு உண்மையான கண்டிப்பான நசரேயன் வீட்டிலிருந்து வெளியே வந்தவள். இனிமையான சிறிய பெண். ஒரு அன்பான கணவனை உடையவளாய் இருக்கிறாள். அவரைக் கூட எனக்கு தெரியும். அவளை திருமணம் செய்திருக்கிறதான மனிதன் உண்மையாகவே நல்லவர். மேலும் அவன் சற்று சிறிய... அவர்கள் இந்த பிள்ளைகளை கர்த்தருக்கென்று சேவை செய்யும்படியாக வளர்த்து பள்ளிகளில் அவர்களை சேர்த்திருக்கிறார்கள். தவறாயிருக்கிற காரியங்களை செய்யாதபடிக்கு அவர்கள் உண்மையாகவே கிறிஸ்துவுக் குள்ளாக வேறூன்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அங்கே அது சென்றது. சற்றே ஒரு இடைவெளியில், சற்று என்னைப் போலவே..சிறிது நேரத்திற்கு முன்பாக நான் பார்த்தபோது, ஒரு சிறிய பையனை பின்பாக நோட்டம் விட்டபோது, சரியாக இதே போன்றதான காரியத்தை உடையவனாய் இருந்தான். மேலும் அந்த ...... ஒரு நாள் சகோ.ரைட்ஸ், ஆர்வில் இவர்களுடைய வீட்டிற்கு ஒரு இரவு சென்றிருந்தோம். அவர்கள் முழுவதுமாக உடைந்து போன நிலையில் இருந்தார்கள். மேலும் அவர்.... வீட்டிலிருந்து என்னை வெளியேற்ற முயற்சித்தார். ஆர்விலும் நானும் அந்த அளவிற்கு நண்பர்களாயிருந்தோம். உண்மையாக பார்த்தால் நான் அவருக்கு தகப்பனைப் போல் இருப்பேன். அவருடைய அப்பாவுக்கும், அவருடைய அம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்தேன். “இந்த இடத்தைவிட்டு வெளியேபோ, இங்கிருந்து போ என்று கத்திக் கொண்டே குதிக்க ஆரம்பித்தார், பாருங்கள்? 9இப்பொழுது, அங்கே நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், ஆவிகளின் வரிசைக்குள்ளாக சென்று அந்த பையனுடைய ஆவியை பற்றி பிடிக்கவேண்டும். பாருங்கள்? அவனுடைய சிறிய இருதயத்திற்குள்ளாக அநேக துக்கமான காரியங்கள் வந்திருந்தது, மேலும் அவன் வாலிபனாய் இருந்தான். அவன் அநேக காரியங்களை பார்த்திருக்கிறான். அவன் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ, அந்த இடத்திற்கு அவனை கொண்டு வர வேண்டியதாய் இருந்தது. நீங்கள் பாருங்கள்? சில நாட்களில் அவன் சரியாகி விட்டான். இந்த காரியத்திலேயும் நீங்கள் அதையே தான் செய்ய வேண்டும். நான் அதை பார்த்தேன், மேலும் அது உண்மையென்று எனக்கு தெரியும். ஆனால் இப்பொழுது, சற்று.....இந்த சிறிய பெண், அவள், தான் எங்கிருக்கிறோம் என்று அறியாதிருக்கிற அந்த இடத்தி லிருந்து அவளுடைய இடத்திற்கு மறுபடியுமாக அவளை கொண்டுவர தேவன் எனக்கு உதவிச்செய்யும்படியாக, இப்பொழுது நீங்கள் எல்லோரும் ஜெபிக்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்ளுகிறேன். மேலும் அந்த புலன் விசுவாசத்தின் மூலமாக வரும். பாருங்கள், அவளுக்கென்று விசுவாசத்தை எடுக்க, அந்த விசுவாசம் அவளிடத்தில் இல்லை. அவள், தான் எங்கிருக்கிறாள் என்பதும் வேறெதுவும் அவளுக்கு தெரியாது. பாருங்கள்? அது இங்கே நம்முடைய விசுவாசத்தை எடுக்கவேண்டியதாய் இருக்கிறது. 10மேலும் இப்பொழுது, அந்த கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலமாக நமக்கு அந்த தருணம் கிடைத்திருக்கிறது. நான்.... நீங்கள் அங்கே தான் இருக்கிறீர்கள். அந்த ஒரு வழியில் தேவனுடைய வார்த்தை ஒரு பாவியை உருவ குத்துகிறது. வார்த்தையை பிரசங்கிப்பதை தாண்டி அது செல்ல வேண்டியதாய் இருக்கிறது. நான் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பாக சிறிது பேசவேண்டுமென்று விரும்பினதற்கு காரணம் அதுதான். அநேக காலத்திற்கு முன்பாக கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனம் ஞாபகமிருக்கிறதா? நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மறு பக்கமாக பார்ப்பதை பற்றியது. மறுபக்கமாக பார்ப்பதை பற்றி அன்று காலை சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நல்லது, அது உண் மையாயிருந்தது. மேலும் அது.... முழு சுவிசேஷ வியாபாரிகள் அமைப்பின் “சத்தம்” என்ற பத்திரிக்கையின் பின் பக்கத்தில் அந்த படத்தை போட்டு அதை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு சிறு காரியத்தை உட்புகுத்தி, கீழே ஒரு சிறியபாகத்தில் ஊழியத்தை பற்றி சொல்லியிருந்தார்கள். உலகநாடுகளுக் கிடையே வெளியிடப்படும் பத்திரிக்கையாய் இருப்பதினால் அதில் வெளியிட்டிருந்தார்கள். முதல் பக்கத்தை அதற்கென்று பிரதிஷ்டை செய்து, முதலாவதாக அந்த தரிசனத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். பார்த்தீர்களா? இப்பொழுது நான் அவைகளை இங்கே வைத்திருக் கிறேன். நீங்கள் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை நீங்கள் வாசிக்க முடியும். மேலும் நீங்கள் அதை பெற்று கொள்ள முடியும். இந்த காலையில் சகோதரர்கள் நீங்கள் இன்னும் எத்தனைப் பேர் முன் வருவீர்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை நீங்கள் தவறவிடுவீர்களானால், நல்லது, நீங்கள் அலுவலகத்திற்கு செல்லுங்கள். அவர்கள் அதை அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அவர்களில் ஒரு குழுவை அனுமதித்து தொடர்ந்து அதில் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? 11மேலும் என்னுடைய இருதயத்தில் இருப்பது அவ்வளவுதான். நான் கேட்டுக்கொண்டிருப்பது, தொடர்ந்து முன்னேறுங்கள். நதிக்கு அப்பால் அங்கு ஒரு நல்ல தேசமிருக்கிறது. அந்த தேசத்தை சந்திக்குமட்டாக தொடர்ந்து முன்னேறுவோம். இப்பொழுது சகோதரன் ஸ்டிக்கர், சகோதரி ஸ்டிக்கருடைய சிறிய குழந்தையினுடைய பிரதிஷ்டையை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆதலால் அது.... எத்தனைப் பேர் இப்பொழுது உங்களுக்கு இருக்கிறார்கள் சகோதரி ஸ்டிக்கர்? ஆறு சிறிய பிள்ளைகள். அது ஒரு அருமையான சிறு குடும்பம். மேலும் அவர்கள் அவ்விதமாக.... சமீபத்தில் ஆப்பரிக் காவிலிருந்து நம்முடைய மிஷினெரிமார்கள் திரும்பி வந்தார் கள். அவர்களுடைய எல்லா குழந்தைகளும் அழகான சிறிய பிள்ளைகள். பிரதிஷ்டை ஆராதனைக்காக இந்த காலையில் இந்த குழந்தையையும் பார்க்கிறேன். அவர்கள் அவர்களை கொண்டு வந்துக் கொண்டிருந்தார்கள். டெட்டி எங்கே? டெட்டி ஒரு நிமிடம் பியானோவிடம் வரமுடியுமா? நம்முடைய பாடலை எடுத்துக்கொள்வோம்... சிறிய பாடல், அந்த சிறிய பாடல் உங்களுக்கு தெரியும். “அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள்” என்று நாம் பாடுவோம் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரிதானே? 12பாவத்தின் களத்திலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வருவோம். மேலும் அந்த காரணத்தினால் தான் நாம் இதை பாடுகிறோம். ஏனென்றால் பெற்றோர்கள், நம்மால் முடிந்த எல்லாவற்றோடும் சற்றே அவர்களை பிரதிஷ்டைக் காக கொண்டுவருவோம். அவர்கள் இன்னும் சிறியவர்களாய் இருப்பதினால், பாவத்தின் களத்தில் அவர்கள் வழி தவறி போவார்கள். நாம் கர்த்தருக்கென்று அவர்களை பிரதிஷ்டை செய்கிறோம். “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்”. நாம் சற்று, டெட்டி அது உனக்கு தெரியுமா? நாம் அதில் ஒரு சரணத்தை பாடுவோம். “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவத்தின் களத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வாருங்கள்”. அவர்களை உள்ளே (வேறொரு குழந்தை இருக்குமானால், சற்றே அதையும் உள்ளே கொண்டு வாருங்கள்) சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள். பாவத்தின் களத்திலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டுவாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சுற்றி திரிகிறவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். சகோதரன் ஸ்டிக்கர், சகோதரி ஸ்டிக்கர், அவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு, அந்த பாடல் எதை குறித்து பேசுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று நான் உணர்ந்துக்கொண்டேன். உங்களுடைய குழந்தை, அது பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாக மரிக்குமானால், அல்லது வேறென்ன அதிகமாக நடந்தாலும், அது ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கல்வாரியில் அதை செய்து முடித்தது. ஆனால் அவருடைய மகத்தான உலகபிரயாணத்தில், தம்முடைய கரங்களை அந்த சிறு பிள்ளைகளின் மீது வைத்த போது அவர் சொன்னார், “துயரப்படுகிற பிள்ளைகள் என்னிடத்தில் வரட்டும்” என்றதின் ஞாபகார்த்தமாக தான் நீங்கள் இந்த காலையில் பிள்ளைகளை கொண்டு வந்திருக்கிறீர்கள். நம்மீது அந்த நம்பிக்கையை வைத்து, அந்த சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்க முடிவதினால், ஒரு விசுவாச ஜெபத்தை நாம் செய்து, அவர்களுடைய வாழ்க்கையை தேவனுக்காக பிரதிஷ்டை செய்கிறோம். 13குழந்தையினுடைய பெயர் என்ன? மெரிலின் மாட்ஜ், மெரிலின் மாட்ஜ் ஸ்டிக்கர். அதற்கு எத்தனை மாதமாகிறது? பதிமூன்று மாதங்கள். ஆப்பரிக்காவில் பிறந்திருக்கிறது, அது சரிதானே? நல்லது, நாளை என்று ஒன்று இருக்குமானால், இந்த சிறிய குழந்தை அவள் எங்கே பிறந்தாளோ, அங்கே ஊழிய களத்தில் அவள் ஒரு மிஷினரியாக இருக்கட்டும். ஒரு அழகான சிறிய பிள்ளை . சகோ.நெவில் உங்களால் வர முடியுமா? உங்களால்.... ஓ, என்னே, நான் எப்பொழுதுமே சிறு பிள்ளைகளை நேசிப்பவன். இது ஒரு அழகான சிறியபிள்ளை இல்லையா? சிறு பிள்ளைக்காக ஜெபிக்கும்போது நம்முடைய தலைகளை வணங்கியிருப்போம். 14எங்கள் பரலோக பிதாவே, ஊழியப் பாதையில் யுத்தமானது நடந்துக் கொண்டிருந்த போது, இந்த ஊழியக் களத்தில் பிறந்த இந்த அழகான சிறிய குழந்தையை, உம்மிடத்தில் மெரிலின் மாட்ஜ் ஸ்டிக்கரை நாங்கள் கொண்டு வருகிறோம். இந்த பிள்ளையை நீர் ஆசீர்வதிக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். வேதத்தில் அவர்கள் பிள்ளைகளை உம்மிடத்தில் கொண்டு வந்தார்கள்..... சிறு பிள்ளைகளுக்காக நீர் சொன்னீர்... நீர் அவர்கள் மீது உம்முடைய கரத்தை வைத்து “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள், அவர்களை தடை பண்ணாதிருங்கள், பரலோக இராஜ்ஜியம் அப்படிப் பட்டவர்களுடையது” என்று நீர் சொன்னீர். தகப்பனும், தாயும் குழந்தையை இன்று எங்களுடைய கரங்களில் வைத்திருக்கிறார்கள். விசுவாசத்தினாலே நாங்கள் கண்ணிகளைக் கட்டி, விசுவாசத்தினாலே நாங்கள் குழந்தையை உம்முடைய கரங்களில் வைக்கிறோம். அவள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உம்மை சேவிக்கட்டும். அவளுக்குள்ளிருக்கிற ஒவ்வொரு இழையும் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவைகளாக இருக்கட்டும். கர்த்தராகிய இயேசுவே அதை தந்தருளும். அவளுடைய தகப்பனையும், தாயையும், அவளுடைய சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் ஆசீர்வதியும். அவர்களும் கூட அவ்விதமாக வளர்க்கப்பட்டு தேவனுக்கு சேவை செய்யக் கூடிய ஒரு மகிமையான குடும்பமாக இருக்கட்டும். தகப்பனே இந்த சிறிய மெரிலின் மாட்ஜை உமக்கு வல்லமையாய் சேவை செய்யும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மிடத்தில் தருகிறோம். அவளையும், அவளுடைய தகப்பனையும், தாயையும், அவளுக்கு அன்பான வர்களையும் ஆசீர்வதியும். உம்முடைய ஊழியத்தின் பாதையில் அதிககாலமாக சந்தோஷமாக ஜீவிக்கும்படியாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோ.ஸ்டிக்கர், ஆம், அவள் ஒரு அருமையான சிறிய ஸ்திரீ. நன்றி, டெட்டி சிறுவனே. சிறு பிள்ளைகளென்றால் எனக்கு அதிக விருப்பம். நீங்களும் அப்படிதானே? 15கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனத்தை எத்தனைப் பேர் கேட்காமலிருக்கிறீர்கள். கேட்காமலிருப்பவர்களாகிய உங்களுடைய கரங்களை நான் பார்க்கட்டும். சகோ.நெவில் நீங்கள் உங்களுடைய சிறு புஸ்தகத்தை வைத்திருக் கிறீர்களா? ஒரு வேளை நீர் அதை சரியாக இங்கே ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் வாசிப்பீரானால், நான் விசுவாசிக்கிறேன் அது.... சரியாக இங்கே ....... நீர் அதை செய்வீரானால்..... (பாராக்கள் 17 முதல் 25 வரை) முழு சுவிசேஷ வியாபாரிகளின் அமைப்பு வெளியிடும் “சத்தம்” என்ற பத்திரிக்கையில், சகோ.பிரன்ஹாமின் தரிசனத்தை குறித்த காரியங்கள் அச்சிடப்பட்டிருந்ததான பகுதியை சகோ.நெவில் வாசிக்கிறார்: மற்றொரு நாள் காலையில் என்னுடைய படுக்கையில் நான் படுத்துக் கொண்டிருந்தேன். நான் சற்றே நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டேன். என்னுடைய இரண்டு கைகளையும் தலைக்கு பின்பாக வைத்து, தலையணையில் தலையை வைத்த வண்ணமாக சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்தேன். மறுபக்கத்தில் அது என்னவாயிருக்கும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். 16என்னுடைய ஜனங்களைப் போல வயது முதிர்ந்தவனாகும் வரை ஜீவிப்பதில் என்னுடைய வாழ் நாட்களில் பாதி நாட்கள் கடந்து போய் விட்டதை நான் உணர்ந்தேன். இந்த ஜீவியத்திலிருந்து கடந்து போவதற்கு முன்பாக, கர்த்தருக்கென்று அதிகமான காரியங்களை செய்ய விரும்புகிறேன். நான் ஒரு சத்தத்தை கேட்டேன், அது சொல்லிற்று, “நீ இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறாய், யுத்தத்தில் தொடர்ந்து முன்னேறி கொண்டேயிரு”. நான் இவற்றை ஆழமாக சிந்தித்தேன்.... அவைகள் அங்கே இந்த வார்த்தைகளை ஆழமாக சிந்தித்தது. ஒரு சத்தத்தை நான் கேட்டேனா அல்லது நான் யூகித்தேனா என்று நான் நினைத்தேன். மறுபடியும் அந்த சத்தமானது, “யுத்தத்தில் முன்னேறு, தொடர்ந்து முன்னேறு, தொடர்ந்து முன்னேறு” — 17சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார்: இன்னும் அதை விசுவாசிக்க முடியாமல், எனக்கு நானே இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டேனா என்று நான் யோசித்தேன். நான் என்னுடைய உதடுகளை என்னுடைய பற்களுக்கு நடுவாக வைத்து, என்னுடைய கரத்தை என்னுடைய வாயின் மீது வைத்துக்கொண்டு நான் கவனித்தேன். மறுபடியுமாக அந்த சத்தமானது என்னுடனே பேசி, பாதையின் முடிவில் என்ன இருக்கிறது என்பதை நீ அறிந்திருப்பாயானால், சற்றே தொடர்ந்து முன்னேறு. மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு பாடலின் இசையையும், வார்த்தைகளையும் நான் வெளித்தோற்றமாக கேட்டேன். நான் பரம வீட்டிற்கு போக வேண்டுமென்ற கவலையும் மன சோர்வும் உண்டாயிற்று. நான் இயேசுவை பார்க்க விரும்பினேன். அந்த ஆலய மணியின் ஓசையைக் கேட்க வாஞ்சையுள்ளவனாயிருக்கிறேன். அது என்னுடைய,பாதையை வெளிச்சமாக்கி, எல்லாவிதமான பயங்களையும் புறம்பாக்கிப் போடும். கர்த்தாவே காலத்திரைக்கு அப்பால், கடந்தவை களை நான் பார்க்கட்டும். காலத்திரைக்கு அப்பாலுள்ள காரியங்களை நீ பார்க்க விரும்புகிறாயா என்று, அந்த சத்தமானது என்னிடத்தில் கேட்டது. “அது எனக்கு அதிக உதவியாய் இருக்கும்” என்று பதிலளித்தேன். சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார்: என்ன நடந் தது, என்னால் சொல்ல முடியாது. நான் சரீரத்திலிருந்தேனா அல்லது ஒரு வேளை மேலே எடுக்கப்பட்டேனா, எனக்கு அது தெரியாது. எனக்கு கிடைத்த தரிசனங்களில் இதுவரை நான் பார்த்திராத ஒரு தரிசனமாய் அது இருந்தது. நான் எடுத்து செல்லப்பட்ட இடத்தை என்னால் பார்க்க முடிந்தது. மேலும் கீழே படுக்கையில் நான் படுத்திருப்பதையும் பார்த்தேன். “இது ஒரு வினோதமான காரியமாய் இருக்கிறது என்று நான் சொன்னேன்”. 18அங்கே அதிகமான எண்ணிக்கையுள்ள ஜனங்கள் இருந்தார்கள். அவர்கள் அழுது கொண்டே என்னிடமாய் ஓடி வந்து, “ஓ, என்னுடைய விலையேற பெற்ற சகோதரனே” என்றார்கள். முதலாவதாக ஒரு வாலிப சகோதரி, அவர்களுடைய இருபது வயதிலிருந்த வண்ணமாக வந்தார்கள். மேலும் அவர்கள் என்னை அணைத்த வண்ணமாக, “எங்களுடைய விலையேற பெற்ற சகோதரனே” என்றார்கள். சகோ. நெவில் வாசிப்பதை தொடருகிறார்: வாலிப ஆண்கள் அவர்களுடைய முழு வாலிபப் பருவத்துடனும், பகட்டான கண்கள், இருளாக்கப்பட்ட இரவினில் ஜொலிக்கிற நட்சத்திரங்களை போலவும், முத்துக்களைப்போல வெண் மையான பற்களையும் உடையவர்களாக என்னை அணைத்துக்கொண்டு, “எங்களுடைய விலையேற பெற்ற சகோதரனே” என்று சொன்னார்கள். பின்பு நானும் கூட வாலிபனாக மாற்றப்பட்டிருக்கிறதை நான் கவனித்தேன். அங்கு என்னை நானே பார்த்தேன். பின்பு நான் கீழே திரும்பி பார்த்தபோது, என்னுடைய கைகளை தலைக்கு பின்பாக வைத்த வண்ணமாக, என்னுடைய வயதான சரீரம் அங்கே கீழே படுத்திருப்பதை பார்த்தேன். “என்னால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று நான் சொன்னேன்”. நான் எங்கே இருக்கிறேன் என்ற இடத்தை நான் அறிந்துக்கொள்ள முயற்சித்தபோது, அங்கு நேற்று என்பது இல்லை, நாளை என்பதில்லை என்பதை உணர ஆரம்பித்தேன். ஒருவரும் அங்கு சோர்வடைய முடியவில்லை. இதுவரை நான் பார்த்திராத கணக்கிலடங்காத அநேக வாலிப ஸ்திரீகள் தங்களுடைய கரங்களை என்னை சுற்றிலும் போட்டு, ஒரு மகத்தான அன்பானது என்னை வெற்றி கொண்டது என்பதை நான் கண்டுக்கொண்டேன், மானிட ஒழுக்கத்திற்கு எந்தவிதமான உடல் சார்ந்த வசீகரிப்பும் அங்கில்லை . இந்த வாலிப ஸ்திரீகள் எல்லோரும் தங்களுடைய தலைமுடியை இடுப்பு வரை வைத்திருந்ததை நான் கவனித்தேன். அவர்கள் தங்கள் மேலாடையை தங்களுடைய பாதம்வரை அணிந்திருந்ததை நான் பார்த்தேன். சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார். இதன் பின்பு என்னுடைய முதல் மனைவி ஹோப் என்னை அணைத்து “என்னுடைய விலையேற பெற்ற சகோதரனே” என்றாள், அதன் பின்பு இன்னொரு சகோதரி என்னை அணைத்தாள், மேலும் ஹோப் திரும்பி அந்த வாலிப ஸ்திரீயை அணைத் தாள். “எனக்கு இது புரியவில்லை என்று நான் சொன்னேன் . இது நம்முடைய மானிட அன்பை காட்டிலும் முழுவதும் வித்தியாசமான காரியமாய் இது இருக்கிறது. கீழே படுக்கையிலிருக்கும் அந்த வயதான சரீரத்தினிடத்திற்கு போக எனக்கு விருப்பமில்லை”. பின்பு அந்த சத்தம் என்னுடனே பேசி “பரிசுத்த ஆவியை குறித்து நீ பிரசங்கித்த காரியம் இதுதான். இதுதான் அந்த பரிபூரண அன்பு. அந்த பரிபூரண அன்பில்லாமல் இங்கு ஒன்றும் நுழைய முடியாது”. சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார். அதன் பின்பு நான் மேலே எடுக்கப்பட்டு உன்னதமான இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன். என்னை சுற்றிலும் காணப்பட்ட ஆண்களும் பெண்களும் அதிக எண்ணிக்கை உள்ளவர்களாக தங்களுடைய வாலிபத்தின் உடல் நலத்தோடு காணப் பட்டார்கள்.“ஓ, எங்களுடைய விலையேற பெற்ற சகோதரனே, உம்மை நாங்கள் இங்கே காண்பதில் மிகவும் சந்தோஷப் படுகிறோம் என்று அவர்களெல்லோரும் ஆனந்தத்தோடு கூக்குரலிட்டார்கள். 19நான் நினைத்தேன் “நான் கனவு காணவில்லை, ஏனென்றால் என்னால் இந்த ஜனங்களையும், என்னுடைய சரீரமானது அங்கே படுக்கையில் படுத்துக் கொண்டிருப் பதையும் என்னால் காணமுடிகிறது”. அந்த சத்தமானது என்னுடனே பேசி, “தீர்க்கதரிசிகள் தங்களுடைய ஜனங்களோடு கூட்டப்படுகிறார்கள் என்று வேதத்தில் எழுதியிக்கிறதை நீ அறிந்திருக்கிறாயா”? “ஆம், வேத வாக்கியங்களில் அவை எழுதியிருக்கிறது எனக்கு ஞாபக மிருக்கிறது, ஆனால் இத்தனை அதிகமான பிரன்ஹாம்கள் அங்கே இல்லையே” என்று நான் சொன்னேன். சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார்: அந்த சத்தமானது மறுமொழியாக, “இவர்கள் பிரன்ஹாம் குடும்பத்தை சேர்ந்தவர்களல்ல; இவர்களெல்லோரும் உன் மூலமாக...... இவர்களெல்லோரும் உன் மூலமாக மனம் திரும்பியவர்கள். உன்னால் கர்த்தரிடம் வழி நடத்தப் பட்டவர்கள். மிகவும் வாலிபமாகவும், அழகானவர்களாகவும் நீ பார்த்த இந்த ஸ்திரீகளில் சிலரை நீ கர்த்தரிடத்திற்கு வழி நடத்தின் போது தொண்ணூறு வயதிற்கு மேலிருந்தவர்கள். ”எங்களுடைய விலையேற பெற்ற சகோதரனே“ என்று அவர்கள் கூக்குரலிட்டதில் ஆச்சரிய மொன்றுமில்லை. ”பின்பு சுவிசேஷத்தோடு நீர் மாத்திரம் முன் செல்லாமலிருந்திருப்பீரானால், நாங்கள் இங்கே இருந்திருக்க மாட்டோம்“ என்று அங்கிருந்த பெருங்கூட்ட மானது சேர்ந்து கூக்குரலிட்டார்கள். 20“ஓ, இயேசு எங்கே இருக்கிறார், நான் அவரை பார்க்க வேண்டும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர் சற்றே உயர மேலே இருக்கிறார். ஒரு நாளில் உம்மிடத்தில் அவர் வருவார், நீர் ஒரு நடத்துனராக அனுப்பப்பட்டிருக்கிறீர், தேவன் வரும்போது, உம்முடைய போதனைகளுக்கேற்ற விதமாக அவர் உம்மை நியாயம் விசாரிப்பார்” என்று ஜனங்கள் பதிலளித்தார்கள். “பவுலும், பேதுருவும் கூட நியாயத்தீர்ப்புக்காக நிற்க வேண்டுமா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார்: “அவர்கள் என்ன பிரசங்கித்தார்களோ அதையே நான் பிரசங்கித்தேன். அவற்றிலிருந்து ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் அதில் நான் திசை திரும்பவில்லை. அவர்கள் எங்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார் களோ, நானும் அவ்விதமாகவே செய்தேன். அவர்கள் எங்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை குறித்து போதித்தார் களோ, அதையே நான் போதித்தேன்”. “நாங்கள் அதை அறிந்திருக்கிறோம் என்று ஜனங்கள் கூக்குரலிட்டார்கள், உம்மோடு கூட நாங்கள் பூமிக்கு மறுபடியுமாக போகப் போகிறோம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசு வந்து நீர் போதித்த உம்முடைய வார்த்தையின்படியாக உம்மை நியாயம் விசாரிப்பார். பின்பு எங்களை நீர் அவரிடம் சமர்ப்பிப்பீர். மேலும் நாம் யாவரும் ஒன்றாக சேர்ந்து, பூமிக்கு மறுபடியுமாக சென்று, என்றென்றும் ஜீவிக்கப்போகிறோம்“ என்று கூக்குரலிட்டார்கள். ”நான் இப்பொழுது மறுபடியுமாக பூமிக்கு போக வேண்டுமா? என்று கேட்டேன். “அதற்கு அவர்கள் ”ஆம், ஆனால் தொடர்ந்து முன்னேறுங்கள்“ என்று பதிலளித்தார்கள். 21சகோ.நெவில் வாசிப்பதை தொடருகிறார்: நான் அந்த அழகான, ஆனந்தமான இடத்திலிருந்து நகர ஆரம்பித்த போது, என் கண்களால் பார்க்க முடிந்தவரை ஜனங்கள் என்னை நோக்கி கடந்து வந்து, என்னை அணைத்து, “எங்களுடைய விலையேற பெற்ற சகோதரனே” என்று கூக்குரலிட்டார்கள். திடீரென்று மறுபடியுமாக என்னுடைய கட்டிலின் மேல் நான் இருந்தேன். “ஓ, தேவனே எனக்கு உதவிச் செய்யும். வார்த்தைக்கு இணங்காதவனாய் போக என்னை அனுமதியாதேயும். வார்த்தையின் நேர் கோட்டில் நான் நிற்கட்டும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து அக்கரை கொள்ளமாட்டேன் கார்த்தாவே. அந்த அழகான, ஆனந்தமான இடத்தை நோக்கி நான் முன்னேறட்டும். என்னுடைய வாழ்க்கையில் இதுவரை அறிந்ததைக் காட்டிலும் அதிகமானவைகளை அறிந்துக் கொண்டேன். அது அந்த இடத்தை எடுத்துக்கொள்வதற்கு பரிபூரண அன்பை எதிர்ப்பார்க்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கே பொறாமையில்லை, சோர்ந்துபோகு தலில்லை, வியாதிகளில்லை, வயதாகும் தன்மையில்லை, மரணமில்லை , மிகுதியான அழகும், ஆனந்தமுமாக அது ஒன்று மாத்திரமே அங்கு இருக்கிறது. (அல்லேலூயா) நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தாலும், பரிபூரண அன்பை பெற்று கொள்ளுமளவும், அவற்றை எல்லாம் ஓர புறம் ஒதுக்கி வைத்து விடுங்கள். எங்கே நீங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்க முடியுமோ, உங்களுடைய ஒவ்வொரு சத்துருவையும் நேசிக்கக்கூடிய அந்த இடத்திற்கு செல்லுங்கள். விமானங்கள் முழக்கமிட்டாலும், எச்சரிக்கை விளக்கானது ஒளி வீசிக்கொண்டிருந்தாலும் அல்லது பகைஞனுடைய துப்பாக்கி உன் மீது குறி பார்த்துவைக்கப்பட்டிருந்தாலும், அதை குறித்து கவலைப்பட வேண்டாம். இந்த காரியங்கள் உன்னை எதுவும் செய்யாது. 22பரிபூரண அன்பைப் பெற்றுக்கொள். நீ ஒருவேளை இரட்சிக்கப்படாதிருந்தால், இப்பொழுதே இயேசு கிறிஸ்துவை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள். நீ தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், இப்பொழுதே ஞானஸ் நானம் பெற்றுக்கொள். நீ பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால் இப்பொழுதே பெற்றுக்கொள். அந்த பரிபூரண அன்பிற்குள்ளாக தொடர்ந்து முன்னேறு. அது என்னை காலத்திரைக்கு அப்பாலுள்ள அந்த அழகான, ஆனந்தமான இடத்திற்கு என்னைக் கொண்டுச்செல்லும். அல்லேலூயா, தேவனுக்கு மகிமையுண்டாவதாக. ஆமென். (சகோ.நெவில் வியாபாரிகளின் சத்தம் என்கிற பத்திரிக்கை யில் அந்த தரிசனத்தைக் குறித்தப் பகுதியை வாசிப்பதை நிறுத்திக்கொள்ளுகிறார்). அது ..... உங்களில் யாராவது ஒருவர் அதை வாசிக்கக் கூடும் என்று நான் நினைத்தேன். நீங்கள் அந்த சிறு புஸ்தகத்தை பெறாமலிருப்பீர்களானால், ஏன், நீங்கள் அதை பெற்றுக்கொள்ளலாம். பின்பு பக்கத்தின் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் அங்கே ஊழியத்தைக் குறித்த காரியத்தை அங்கே நுழைத்திருக்கிறார்கள். நீங்கள் அதை கவனித் தீர்களோ, இல்லையோ என்று எனக்கு தெரியாது. இப்பொழுது, அது வானத்தின் கீழிருக்கிறதான எல்லா மொழிகளிலும் அது சென்றுக்கொண்டிருக்கிறது. (நீங்கள் பார்த்தீர்களா?) உலகமெங்கும் அதை வாசிக்கும்படியாக அது சென்றுக் கொண்டிருக்கிறது. 23இப்பொழுது, என்ன... நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்.... “சகோ.பிரன்ஹாமே வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பாக அது என்னவென்று சொல்லுகிறீர்களா? ஏனென்றால் அது இதினிமித்தமாகதான்: நம்முடைய பிரயாசங்கள் வீணாக எடுக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள தக்கதாக. பார்த்தீர்களா? நாம் தேவனை அந்த அன்பு, விசுவாசமென்னும் புலனின் மூலமாகத்தான் நாம் அணுக வேண்டும். விசுவாசம் நம்மை அந்த புலனுக்கு கொண்டு செல்லுகிறது. அன்பு என்ற ஒன்று தான் நம்மை உள்ளே கொண்டு செல்லுகிறது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது..இப்பொழுது தேவன் எவ்விதமாக அதை செய்வாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்..... இப்பொழுது, நாம் (டேப்பில் காலியிடம்) இப்பொழுது உங்களுடைய விசுவாசமானது அந்த இடத்திற்கு செல்லுகிறது. நீங்கள் நினைக்கிறீர்கள்.... இந்த கூடாரமும், இந்த குழுக்களாயுள்ள ஜனங்களும் தங்களுடைய எல்லா பிரயாசங்களையும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக செய்ததை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இங்கிருக்கும் அநேகர் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக உங்களுடைய பிள்ளைகளை உடமை யாக்கியிருக்கிறீர்கள். தேவனுடைய இராஜ்ஜியத்தினிமித்தமாக இங்கிருக்கும் அநேகர் வஸ்திரமில்லாமல் கடந்து போய் விட்டார்கள். தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக அநேகர் சூராவளிகளை கடந்து, இந்த கூடாரத்திற்கு வருவதற்காக, கால்களில் பாத அணிகள் இல்லாமல் வந்திருக்கிறார்கள். அது சரியே. ஒரு ஓவியன் ஒரு பெரிய ஓவியத்தை வரைய ஆரம்பித்து, அது மிகவும் அழகாகவும், அதனுடைய உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும், அவன் ஏன் அதை கிழித்துப் போடுகிறான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்த ஓவியனிடத்தில் ஏதோ தவறிருக்கக்கூடும். ஒரு பாடல் இயற்றுபவன் அது அதனுடைய உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு அந்த இசைக் காரியங்களை அவன் ஏன் கிழித்துப் போடுகிறான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்த இசைக் கலைஞனிடம் ஏதோ தவறிருக்கக்கூடும். பார்த்தீர்களா? தேவனிடத்தில் ஏதோ தவறிருக்கிறது. தேவன் இப்படிப்பட்டதான ஒரு காரியத்தை செய்து முடித்து, அதை கிழித்து தூர எரிந்து போடுகிற வரல்ல. அது அவருடைய இராஜ்ஜியத்திற்காக. அது அவருடைய மகிமைக்காக. 24நாம் ஒவ்வொருவரும் இந்த ஓவியத்திலும், பாடலிலும் ஒரு பகுதியை நாம் நடிக்கிறோம். நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் பகுதிகளாய் இருக்கிறோம். மேலும் அது, நாம் நம்முடைய பகுதிகளை நடிக்க முடிந்து, எவ்வளவு கால கட்டமாயிருந்தாலும், நாம் அதை உணர்ந்து, நாம் நம்முடைய ஸ்தானத்தில் சரியாக பொருத்தப்படுவதைப் பார்த்து, பின்பு அந்த இடத்திலேயே சரியாக தரித்திருக் கிறோம். ஒரு தருணத்தில் அது அன்பிற்குள்ளாக இருக்கிறதை அறிந்துக்கொள்ளுகிறோம். ஏனென்றால் அது தான் அதை ஓவியமாக்குகிறது. இப்பொழுது இந்த தரிசனங்களையும், மற்றவைகளையும் இவ்விதமாக நீங்கள் பார்க்கும்போது, அது கடினமாகிறது. ஏனென்றால் மறுபக்கத்தில் அது என்னவாயிருக்கப் போகிறது என்பதை அறிந்துக்கொள்வதற்காக. நான் விரும்பினேன், நான் அறிந்திருக்கிறேன். அந்த மனிதன் அந்த காரியத்தை அங்கே நுழைத்து, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை குறித்து, அவர்கள் எப்படியாக இப்படிப்பட்டதான தரிசனங்களைப் பார்த்தார்கள். இப்பொழுது அவைகளை யெல்லாம் தாண்டி எவ்விதமாக எப்படி....அதை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் கர்த்தர், நாம் அதற்குள்ளாக முன்னேறும்படியாக அனுமதித்து, அது என்னவென்று பார்க்கும்படியாக செய்தார். இப்பொழுது நண்பர்களே, நான் அப்பொழுது தூங்கிய நிலையிலில்லை. மேலும் சற்றே உங்களுக்கும், எனக்கும், சபைக்கும் நடுவாக நின்றுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு தரிசனமுமல்ல. ஒரு தரிசனம் என்றால் என்னவென்று எனக்கு தெரியும். இங்கே சில....சற்றே கடந்த வாரத்தில் ஒவ்வொரு இரவும் முப்பது முறை அது சம்பவித்திருக்கும். உங்கள் மீது இருக்கும் பாரத்தை உங்களால் கற்பனை செய்ய முடியாது. உங்களை அது ஒரு வேளை தளர்வுக்குள்ளாக கொண்டுச் செல்லும். 25நீங்கள் அப்படிப்பட்டதான ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்து அந்த பொருப்புகள் உங்கள் மீது இருக்கும் போது அது எவ்விதமாக இருக்கும். கூட்டம் ஒரு வேளை சரியாகவோ அல்லது தவறாகவோ நடந்திருந்தாலும் கூட அந்த பொருப்புகள் சற்றே உங்கள் மீது இருக்குமல்லவா? நீங்கள் ஒவ்வொரு ஊழியக் காரருக்கும், ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளித்தாக வேண்டும். கூட்டம் சரியாகவோ அல்லது தவறாகவோ நடந்தாலும், அது உங்கள் மீது மாத்திரமே அந்த பொருப்புகளை வைக்கும். அது உங்களுக்கு என்ன செய்யுமென்று பாருங்கள். என்னுடைய உடன் ஊழியர்களில் சிலர், புஸ்தகங்களை விற்பனை செய்வதும், மற்ற காரியங்களை செய்வதுமே அவர்களை தளர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர்கள் வீடுகளுக்கு போக வேண்டும். (பாருங்கள்?) படுத்து ஓய்வெடுக்க வேண்டும். அன்று இரவு சபைக்கு அவர்கள் வருகிறதில்லை. என்னே, ஓ, அது திகிலுண்டாக்குகிறது. என்னுடைய மருமகளைப்போல, அருமையான சிறிய கிறிஸ்தவ பெண், லாய்ஸ். எட்டு வாரத்திற்கோ அல்லது ஏழு வாரத்திற்கோ தொடர்ந்து கூட்டங்களுக்கு சென்று திரும்பி வந்து ஓரிருநாள் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கிறாள், எந்தவித பொருப்புகளுமில்லாமல். பில்லி சற்றே சில ஜெப அட்டைகளை கொடுத்துவிட்டு துண்டுகளாக கிழிக்கப்பட்டு போகிறான். ஆனால் பாருங்கள் முழு பாரமும் என் மீது சுமத்தப்படுகிறது. எனக்காக ஜெபிக்கும்படியாக நான் உங்களை சார்ந்திருக்க வேண்டியதாய் இருக்கிறது. பாருங்கள், இவையெல்லா வற்றிற்கும் மேலாக, ஒரு இருபது நிமிட உணர்ச்சியூட்டக் கூடிய பிரசங்கமானது, சரீரத்தின் எட்டு மணி நேர கடின உழைப்பிற்கு ஒப்பிடப்படுகிறதென்று ஒத்துக்கொள்ளப் படுகிறது. நான் ஒரு இரவிலே இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பிரசங்கிக்கிறேன். சில நேரங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற விதத்தில், பாருங்கள்? அதன் பின்பு ஒரு தரிசனத்தை குறித்தென்ன? ஒரு தரிச னம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை பெலவீனமாக்கிற்று. அது சரியே. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள், அது அவரை பெலவீனப்படுத்தியது என்று வேதம் சொல்லுகிறது. நல்லது, தேவனுடைய குமாரனாகிய அவரை, ஒரு தரிசனமே அவரை பெலவீனப்படுத்தியிருக்கக் கூடுமானால், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய என்னை பற்றியது எப்படியிருக்கும்? ஒரே இரவிலே இறுபது தரிசனங்கள் என்ன செய்யக் கூடும்? 26பாருங்கள்? அது..... மானிட தன்மையை தாண்டி, நாம் சற்றே நின்று யோசித்து பார்த்தால், ஒரு மானிட சரீரத்தால் அதை தாங்கிக் கொள்ளமுடியாது. நான் என்னுடைய தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளுகிறவனாக, ஒரு புத்தி சுயாதீனமற்ற நிறுவனத்தில் இருந்திருப்பேன். பாருங்கள்? அது..... அது உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத பெலவீனமாயிருக்கும்.... அது ஒரு உட்புறமான பெலவீனம். (பாருங்கள்?) அது உங்களைக்கொன்று போடும். ஆனால் நீங்கள் எதை நோக்கி நீங்கள் முன்னேறுவீர்கள்? நான் சகோதரன், சகோதரி காக்ஸையும், ராட்னேயும் அவருடைய மனைவியும், மேலும் சகோதரிகள் பின் பகுதியில் இருக்கிறார்கள், புதிதாக இரட்சிப்புக்குள் வந்தவர்களின் நிமித்தமாக நான் இதை சொல்லக்கூடும். தூரத்தில் எங்கேயோ ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எப்பொழுதாகிலும்.... அதை உங்களுடைய மனதில் சிந்தித்து அதை குறித்த ஒரு காட்சியை கொண்டு வாருங்கள். அது ஒரு மேலான மகிமை நிறைந்த காரியமாய் இருக்கிறது. அது நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசத்திற்கும் தகுதியாயிருக்கிறது. பாருங்கள்? 27இப்பொழுது வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பாக, நான் இதை சொல்லக்கூடும். ஒரு சிறு குழந்தை அது பிறப்பதற்கு முன்பாக என்னவாயிருக்கும்..... நாம் அதை எடுத்துக் கொள்ளுவோம். அந்த சிறு குழந்தை தன்னுடைய தாயாரின் கர்ப்பத்தில் அந்த ஓன்பது மாதங்கள் ஜீவிக்கும் போது, அந்த சிறு குழந்தை யோசிக்கக்கூடும், அது சொல்லக்கூடும், “உங்களுக்கு என்னவென்று தெரியுமா? நான் பிறக்கப்போகும் நேரத்தில் இருப்பதாக அவர்கள் சொல்லு கிறார்கள். நல்லது, நான் அங்கே என்ன செய்யப் போகிறேன்? நான் இங்கே வாழும் இந்த இடத்தைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் என்னுடைய பெலத்தை உள்ளே பெற்றுக் கொண்டேன். மேலும் அங்கே வெளியே சென்று எப்படி ஜீவிக்கப் போகிறேன்? சூரியன் அங்கே பிரகாசிக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஜனங்கள் சுற்றிலும் நடந்த வண்ணமாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு தாயின் கர்ப்பத்தை தவிர வேறொன்றும் எனக்கு தெரியாது. என்னுடைய தாயின் கர்ப்பத்தில் இது ஒன்று மாத்திரமே எனக்கு தெரியும். இங்கே தான் நான் கொண்டு வரப்பட்டேன். இங்கே எனக்கு தெரிந்ததெல்லாம் என்னுடைய தாயின் கர்ப்பப்பை மாத்திரமே. இடங்களுக்கு அதிகமான இடங்கள் இருக்கிதென்று அவர்கள் சொல்லுகிறார்கள்“. நல்லது, அந்த சிறு குழந்தை மரிப்பதற்காக பிறக்க பயப்படுகிறது. அது சரிதானே? அது மரிப்பதற்கு பயப்படுகிறது. ஏனென்றால் அது வருகிறதான இடத்தைக் குறித்து அதற்கு ஒன்றும் தெரியாது. அது ஜீவித்த இடத்தை காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகவும், மில்லியன் மடங்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. அவைகளெல்லாம் என்னவென்பதைக் குறித்து அதற்கு ஒன்றும் தெரியாது. அது சொல்லக்கூடும், எப்படி..... நான் என்ன செய்யப் போகிறேன்? அது மரிப்பதற்காக பிறக்க பயப்படுகிறது. ஆனால் இங்கே ஜீவிக்கிறதான நமக்கு, நல்லது, ஒரு காலத்தில் அங்கே நாம் ஜீவித்தோம். நாம் மறுபடியுமாக அங்கே போகப்போகிற தில்லை. நாம் நம்முடைய தாயின் காப்பத்திற்குள் மறுபடியும் போக விரும்புவதில்லை. பாருங்கள்? இல்லை, அதை நாம் செய்ய விரும்புவதில்லை. 28மேலும் மரிக்கும் போதும் காரியம் அவ்விதமாகவே இருக்கிறது. நண்பனே, ஓ தேவனே, பாருங்கள்? நீங்கள் இந்த இடத்தில் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் இதற்கு முன்பாக இங்கே இருந்ததில்லை. இது எவ்வளவு மகத்தான காரியமென்று உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எப்படி..... அது அங்கே எப்படி இருக்கப்போகிறது? நான்.... ஒரேயொரு காரியத்தைதான் நான் உணரமுடிகிறது அல்லது நீங்கள் உணரமுடிகிறது. தாயின் கர்ப்பத்தில் அந்த சிறு குழந்தையினிடம் அந்த ஆவி வருகிற வண்ணமாக, ஜீவனின் அந்த சிறிய தொடுதல். பாருங்கள் அந்த ஒரு வழியில் மாத்திரமே. தூரத்திலிருக்கும் அந்த மகத்தான தேசத்தைக் குறித்து நாம் புரிந்துக்கொள்ள முடியும். அங்கே வியாதியில்லை, துக்கமில்லை, மரணமில்லை, வயதாகும் தன்மையில்லை, இல்லை, ஒன்றுமேயில்லை. ஓ, என்னே! ஏன், நீங்கள் ஒருமுறை அங்கு செல்வீர்களானால், எப்படி அந்த சிறு குழந்தை தன்னுடைய தாயின் கர்ப்பத்திற்கு மறுபடியும் செல்ல விரும்புவதில்லையோ, அவ்விதமாகவே, இந்த விதமான உலகத்திற்கு மறுபடியுமாக வருவதற்கு விருப்பமிருக்காது. பாருங்கள்? 29அங்கே மறுபக்கத்தில் அது மிகவும் மகத்தானதாய் இருக்கிறது. (பாருங்கள்?) நம்மால் அதை புரிந்துக்கொள்ள முடியாது. நிச்சயமாக முடியாது, நம்மால் முடியாது....ஏன், எவ்விதமாக அந்த சிறு குழந்தை அதிகமாக சிந்திக்க முடியாதோ, அதே விதமாகத்தான் நாமும் கூட அந்த மறுபக்கத்தை குறித்து புரிந்துக்கொள்ளமுடியாது. பாருங்கள்? ஏனென்றால் நாம் இந்த உலகத்தின் கர்ப்பத்திற்குள்ளாக இருந்து, எப்பொழுதாகிலும் அந்த புதிய இராஜ்ஜியத்திற் குள்ளாக, ஒரு புதிய உலகத்திற்குள்ளாக பிறக்க ஆயத்தமா யிருக்கிறோம். அந்த தரிசனங்களை குறித்தும் மற்ற காரியங்களை குறித்தும் அவ்விதமாகத்தான் நான் உணருகிறேன், அல்லது அந்த நாளில் எனக்கு ஏற்பட்ட எந்தவிதமான காரியமாயிருந் தாலும், நான் மறுபக்கத்திற்கு கடந்து சென்று, அது என்னவென்று பார்த்து, பிறகு மறுபடியுமாக இங்கு வந்தேன். ஒரு குழந்தையை நீங்கள் கர்ப்பனை செய்து பார்க்க முடியுமா? அறிவுத்திறனோடு சுற்றிலும் நடப்பது எவ்வளவு மகிமையானதாகவும், மரங்கள் எப்படியாக பூத்து குலுங்குகிறதும், பறவைகள் பாடுகிறதும், சூரிய உதயமும், இப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கை , பின்பு மறுபடியுமாக கார்ப்த்திற்குள்ளாக எப்படி போக முடியும். ஏன், நீங்கள் மறுபடியும் போக விரும்பமாட்டீர்கள், நல்லது. 30பின்பு நாம் நம்முடைய சிந்திக்கிறதான காரியத்தில் ஒரு பக்கம் உணர்ச்சியற்றவர்களாகவோ அல்லது அங்கு என்ன இருக்கிதென்று சிந்திப்பதற்கோ முயற்சி செய்யுங்கள். வேத வாக்கியங்கள் சொல்லுகிறது, “கண்கள் கண்டதுமில்லை, காதுகள் கேட்டதுமில்லை, அவரை நேசிப்பவர்களுக்காக தம்முடைய பண்டக சாலையில் என்ன வைத்திருக்கிறார் என்று ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள் ஒரு போதும் தோன்றினதுமில்லை. பாருங்கள்? ஆதலால் மறுபக்கத்தில் மகிமையானதாக அது இருக்கப்போகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஒரு நாளில் மரணம், நாம் மரணமென்று அழைக்கிறோமே அது, நமக்கு ஒரு புதிய பிறப்பை அது நமக்கு கொடுக்கப்போகிறது. பின்பு நாமெல்லோரும் மறுபக்கத்திலுள்ள உலகத்திற்குள்ளாக வரப்போகிறோம். சகோ.ஜார்ஜ் நீங்கள் வயது சென்றவராகவும், முடமானவராகவும் அங்கு இருக்கமுடியாது. மேலும் சகோதரன், சகோதரி ஸ்பென்ஸர் இன்னும் நம்மில் அநேகர் வயது சென்றவர்களும் இன்னும் மற்றவைகளும், அது....நாம் எப்பொழுதும் அங்கே வாலிபமாக இருக்கப் போகிறோம். இந்த வயதான.... “இந்த மாம்சமான போர்வையை களைந்து போட்டு, நான் மேலே எழும்பி, நித்தியமான பரிசை கைப்பற்றிக் கொண்டு, காற்றை கடந்து போகும் போது, சென்று வருகிறேன், சென்று வருகிறேன், இனிமையான ஜெப வேளை என்று குரலெழுப்புவேன்”. அது எல்லாம் முடிந்து விட்டது. ஜெபத்தில் இனி அதிகமான இரவுகள் இருக்கப் போவதில்லை, இனி இருக்கப் போவதில்லை.... சற்றே அந்த இனிமையான, ஆனந்தமான அங்கிருக்கும் வயதிற்குள்ளாக பிரவேசித்து, ஒரு வருடத்திற்கு அல்ல. ஐம்பது வருடங்கள் அல்லது மில்லியன் வருடங்கள். நாம் அங்கு நூறு பில்லியன் வருடங்கள் இருந்திருப்போமானால், நாம் இன்னும் துவங்கி கூட இருக்க மாட்டோம். அதுதான் அது. ஆதலால் இந்த காலையில் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கக்கூடாது. தேவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு மகத்தான காரியத்திற்காகவும் நாம் ஏன் வெற்றியடையும் சூழ்நிலையை எடுத்துக்கொள்ளக்கூடாது? 31இங்கே தெய்வீக சுகமிருக்கிறது. ஏன் இயேசு வாரினால் அடிக்கப்பட்டார்? ஓவியத்தை கிழித்து அப்படிப்பட்டதான ஒரு காரியமில்லை என்று சொல்வதற்காகவா? அவர் தம்முடைய சரீரத்தில் வாரினால் அடிக்கப்பட்டார். அதன் வழியாக விலா எலும்பு தெரிந்தது, அவருடைய தழும்புகளால் குணமானோம். இந்த காலை வேளையில் நாம் அந்த ஓவியத்தை கிழிக்க வேண்டாம். அதை நாம் அணைத்துக்கொண்டு, அதை ஏற்றுகொள்வோம். இப்பொழுது, சகோதரனே, ஜெபிக்கப்படப் போகிறதான நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் ஒவ்வொரு வரும் பலிபீடத்தண்டை நிற்பீர்களானால், சிறிது நேரத்திற்கு முன்பாக செய்தி புறப்பட்டு சென்ற போது, அன்னிய பாஷைகள் மூலமாகவும், வியாக்கியானத்தின் மூலமாகவும் சொல்லப்பட்ட விதமாக, வியாதியஸ்தர் மீது நாங்கள் கரத்தை வைக்கும்போது தேவனுடைய வல்லமையான கிரியைகளை பாருங்கள்.... இப்பொழுது நம்முடைய சகோதரன், கட்டிலின் மீது படுத்திருப்பவரே, நீங்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் உங்களிடத்திற்கு வருவோம். ஆனால், நாங்கள் ஜெபிக்க வேண்டு மென்றிருக்கிற இன்னும் மற்றவர்கள் இருப்பார்களானால், பீடத்தை சுற்றி நிற்க விரும்புகிறவர்கள், சகோதரனும், நானும் ஜெபித்து கரங்களை வியாயஸ்தர் மீது வைக்கும்போது, வருகிறவர்கள் இப்பொழுதே சரியாக வரலாம். ஞாபகம் வைத்திருங்கள். அந்த படத்தை அணைத்துக் கொள்ளுங்கள். அவருடைய தழும்புகளால் குணமானோம். “எனக்கு அது விளங்கவில்லை கர்த்தாவே” நிச்சயமாக உனக்கு விளங்காது. நீங்கள் இன்னும் உலகத்தின் கர்ப்பப்பைக்குள் இருக்கிறீர்கள். ஆனால் அதற்கான ஆயத்தமெல்லாவற்றையும் அவர் செய்திருக் கிறார். மேலும் மறுபடியும் அவர் அதை எடுப்பதில்லை .... அவர் ஏன் அடிக்கப்பட்டார்? சற்றே ஓவியத்தை கிழித்து போடுவதற்கும் அல்லது பாடலிசையை கிழித்து தூர எரிந்து போடுவதற்காகவுமா? இல்லை ஐயா. அவர் அடிக்கப்பட்டார், காயப்பட்டார், நாம் சுகமாக்கப்பட முடியும் என்பதற்காக இரத்தம் சிந்தினார். அதன் மூலமாக................ அவருடைய தழும்புகளால் நாம் ஒவ்வொருவரும் குணமானோம். 32இப்பொழுது நீங்கள் கூடிக்கொண்டு பீடத்தை சுற்றி வந்து, ஜெபிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறதான வேளையில், இப்பொழுது இங்கே அதிகமாக இருக்கும் அமெரிக்க மேம்பட்ட ஏமாற்று சுவிசேஷ ஊழியத்தில், உங்களை குறித்து பேசி, அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டுமென்ற காரியங்கள், என்னுடைய நண்பனே, ஒரு காரியத்தில் நான் உங்களிடம் உத்தமமாயிருகக் விரும்புகிறேன். அவருக்கு ஊழியம் செய்வதின் அடிப்படையில், நாம் சுகத்தை பெற்றுக்கொண்ட பிறகு, அவருக்கு ஊழியம் செய்வோம் என்ற அடிப்படையில் தான் நாம் சுகத்தை ஏற்று கொள்ள வேண்டும். இப்பொழுது “நீங்கள் சுகத்தை பெற்றுகொள்ள வேண்டுமானால், ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை யிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்” என்று வேதம் சொல்லுகிறது, பாருங்கள்? நீங்கள் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், இங்கிருக்கும் அநேகரில் மரிக்கும் தருவாயிலிருக்கலாம் மேலும் ஒரு காரியம் சம்பவிக்கவில்லையென்றால், நீங்கள் மரிக்க வேண்டும். பின்பு உங்கள் இருதயங்களில் நான் விரும்புகிறேன் ..... இப்பொழுது நாங்கள் உங்களை எண்ணையால் அபிஷேகிக்கலாம், உங்களுடைய மேய்ப்பனும் நானும், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கலாம். ஒரு விசுவாச ஜெபத்தை ஜெபித்து, எங்களால் இயன்ற காரியங்களை செய்யமுடியும். ஆனால் நீங்கள் கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ள உங்களை நீங்களாகவே அதற்குள் நுழைத்துக் கொள்ளாவிட்டால், அது உங்களுக்கு எந்தவித நல்ல காரியத்தையும் கொண்டுவராது. பாருங்கள்? “நான், கர்த்தாவே” என்று நீங்கள் அந்த ஐக்கியத்திற்குள்ளாக கடந்து வரவேண்டும். நான் இப்பொழுது வாலிப ஸ்திரீ நடந்து வருவதை பார்க்கிறேன். அதிக நாட்களுக்கு முன்பில்லாமல் கட்டி போன்ற ஏதோ ஒன்று அல்லது ஹாட்கின்ஸ் என்ற வியாதியினால் அவள் இங்கே வீட்டிற்கு கடந்து வந்தாள். அவள் விசுவாசத்தில் ஒரு மெதோடிஸ்ட். அவள்....அது சரி என்று நான் விசுவாசிக்கிறேன். அது சரிதானே சகோதரியே? அவளுக்கு பக்க வாட்டில் ஒரு பெரிய திரட்சியான சதை கோளம் இருந்தது. இப்பொழுது சுகமாக்கப்பட்டவளாக அவள் அங்கே நின்று கொண்டிருக்கிறாள். 33சகோதரி லீவர் இங்கு நின்று கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன். என்னுடைய வாழ்நாட்களிலேயே நான் பார்த்த மிகவும் மோசமான புற்றுநோய் நோயாளிகளில் அவளும் ஒருத்தி. அவள் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்வாளா என்பதுதான் நான் அவளிடம் கேட்ட முதல் காரியம். இந்த தண்ணீருக்குள் நான் கொண்டுசென்ற போது, அவள் மிகவும் மெலிந்தவளாகவும், அவளுடைய கரங்கள் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருந்தபடியால், நான் அவளை பற்றிக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. அவள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ் நானம் பெற்றுக்கொண்டாள். அது ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பாக இருக்கும். அப்படிதானே சகோதரியே? பதினாறு வருடங்களுக்கு முன்பாக என்று ஒரு சகோதரி சொல்லுகிறார். பதினாறு வருடங்களுக்கு முன்பாக. பதினாறு வருடங்கள் ஜீவனோடு இருக்கும்படியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் மிகவும் திறமையான வைத்தியர்கள் அவளை சுற்றி இருந்தபோது அவள் கீழ்படிதலுக்குள்ளாக வரும்படியாக விருப்பமுள்ளவளாய் இருந்தாள். ஏன் அவளுடைய சொந்த வைத்தியர் என்னிடம் சொன்னார்.... நான் அவரிடத்தில் சொன்னபோது அவர், சொன்னபோது, சொன்னேன், “அவள் சுகமாக்கப்பட்டாள்”. 34“ஓ, இன்னும் சில வாரங்களில் அவள் புற்றுநோயினால் மரித்து விடுவாள், அதை குறித்து கவலைப்பட வேண்டாம், அவள் மரித்து விடுவாள், இன்னும் சில வாரங்களில் அவள் மரித்து விடுவாள்” என்று சொன்னார். அந்த நாள் வரை தான் அவர் ஜீவிப்பாள் என்று ஒரு நாளை அவளுக்கு குறித் திருந்தார். பதினாறு வருடங்களுக்கு பிறகு, இதோ அவள் பீடத்தண்டையில் நின்று கொண்டிருக்கிறாள். இன்னும் என்ன என்னால் அதிகமாக சொல்லக்கூடும். மேலும் மேலுமாக, மேலும் மேலுமாக எவ்விதமாக.....இப்பொழுது, தேவன் அதை தம்முடைய பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு செய்து இன்னொரு பிள்ளைக்கு செய்யாமலிருக்கமாட்டார். அவர் தம்முடைய எல்லா பிள்ளைகளுக்கும் அதை செய்கிறார். “யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் வரலாம்”. அது.... நீ அவரிடத்திற்கு வரவேற்கப்படுகிறாய். இப்பொழுது, விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். வேதம் அதை சொல்லுகிறது. இப்பொழுது, இப்பொழுது, இருந்தால்....நீங்கள் என்ன செய்ய வேண்டுமெ ன்று நான் விரும்புகிறேன் என்றால், உங்கள் தவறுகளை தேவனிடம் அறிக்கை செய்து “கர்த்தாவே, என்னை சுகமாக்கும்” என்று சொல்லுங்கள். நீங்கள் மனந்திரும்ப வில்லையென்றால், உங்களுடைய இருதயங்களை கிறிஸ்துவுக்கு கொடுங்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறாதிருப்பீர்களானால், அங்கே குளம் ஆயத்தமாயிருக்கிறது. பாருங்கள்? 35இந்த சிறிய சகோதரி, இங்கே தெருவுக்கு அப்பால், அங்கே அந்த மத நம்பிக்கையற்றவர், அவள் நிமித்தமாக மனந்திரும்பின போது, அவள் படுக்கையில் இருந்தாள். புற்றுநோயோடு ஸில்வர்க்ரெஸ்ட் என்ற இடத்திலிருந்து அவள் மரிக்கும் தருவாயில் அனுப்பப்பட்டாள். நான் அங்கு சென்ற போது தேவன் எனக்கு ஒரு தரிசனத்தை கொடுத்தார். அவள் சுகமாக்கப்படப் போகிறாள் என்று சொன்னார். அவர் திரு.ஆன்ட்ரூஸ், என்னை அடுத்த நாள் காலையில் சந்தித்து என்னை சற்றே கூச்சலிட்டு வெளியேற்றினார். “அந்த சகோதரியின் மீது ஒரு தவறான நம்பிக்கை போன்றதான காரியம்” என்று அவர் சொன்னார். “திரு.ஈன்ட்ரூஸ் அது தவறான நம்பிக்கையில்லை என்று நான் சொன்னேன். 86. அந்த ஸ்திரீ ஒரு கிறிஸ்தவள், அவளுக்கு முடியும் என்ற நிலையில் அவள் ஞானஸ்நானத்திற்காக வரப்போகிறாள்”. மேலும் “அவள் மரித்துக்கொண்டிருக் கிறாள்” என்று அவர் சொன்னார். “ஐயா நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.....நீங்கள். நீங்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மருத்துவர் என்ன சொல்லுகிறார் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்; தேவன் என்ன சொல்லுகிறாரோ அதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன். பார்த்தீர்களா? இப்பொழுது நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பது தான் வித்தியாசத்தை கொண்டு வருகிறது. பார்த்தீர்களா? மருத்துவர்கள் நீ நிச்சயமாய் மரித்து விடுவாய் என்கிற காரியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் தேவன் என்ன சொல்லுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். யாருடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக்கொள்ளப்போகிறீர்கள்? 36ஆபிரகாம் தனக்கு நூறு வயதும், தன்னுடைய மனைவிக்கு தொண்ணூறு வயதும் இருக்கும் போது, தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டதான காரியத்தில், மருத்துவர்களின் கருத்தை எடுத்துக்கொண்டிருந் திருப்பானானால் எப்படி இருந்திருக்கும்? அதன் பின்பு அவன் என்ன செய்திருக்கமுடியும்? பார்த்தீர்களா? ஏன், மருத்துவர்கள சொல்லியிருக்கலாம், “அந்த மனிதன் பித்து படித்தவன் என்று”. ஆனால் தேவன் அவனுக்குள் நேர்மையானதை உரிமையாக்கியிருந்தார், ஏனென்றால் அவன் தேவனை விசுவாசித்தான். பாருங்கள்? இப்பொழுது, நீ.... அந்த ஸ்திரீ ஜீவிக்கிறாள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுகொள் வதை நிராகரித்துப்போட்டாள். ஏனென்றால் அவள் மெதோடிஸ்டாகவோ அல்லது பிரஸ்பிடேரியனாகவோ இருப்பதினால்; அவள் கொஞ்சம் கொஞ்சமாக வியாதிப்பட தொடங்கினாள். அவள் வந்து கிரேஸ் வெப்பரை தெரிந்து கொண்டாள், சரியாக ஜீவிப்பவர்....அங்கே ஜீவிக்கிறாள்.... இங்கே அவளுடைய மகள் இருக்கிறாள், 37அவளுடைய தோள் பகுதிகள் முழுவதுமாக திரட்சியான சதை கோள வியாதியினால் பரவியிருந்த வண்ணமாகவும், இன்னும் மற்ற எல்லாவற்றோடும் பயணப்பட்டு இங்கே வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞாஸ்நானம் பெற்றுக்கொண்டாள். மேலும் இங்கே வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுகொண்டு, நம்மிடத்திலிருந்து வீதியை தாண்டி அவள் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு வேளை இங்கே உட்கார்ந் திருக்கலாம். சில நிமிடங்களுக்கு முன்பாக சுற்றிலுமாக பார்த்து, நான் ஒரு வேளை அவளை பார்க்க முடியுமா என்று பார்த்தேன். பார்த்தீர்களா? அது கீழ்ப்படிதல், நீங்கள் பார்த்தீர்களா? அது இங்குமங்குமாக போகிறதான காரியமல்ல....நான் சில சகோதரரிடமிருந்து வித்தியாசப்படுகிறேன். சற்றே இவரின் மீது கரங்களை வைத்து, அவரின் மீது, மற்றவர்கள் மீது, அவ்விதமாக அவர்கள் சொல்லுவார்கள், அப்படிப்பட்டதான மேம்பட்ட ஏமாற்று விசுவாசம் அதை செய்ய முடியும். அது அதுவல்ல. நீங்கள் உண்மையான, உறுதியான, வேதத்தின் படியான பரிசுத்த ஆவியின் விசுவாசத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். அவ்விதமாக அது இல்லையென்றால், அது நிலைத்திருக்காது, அது நீடித்திருக்காது. 38இதுவரையில் அவர் எனக்கு உதவி செய்து வந்ததற்கு நான் கர்த்தருக்கு நன்றி சொல்ல முடிவதற்கு அதுதான் காரணம். அந்த.... அந்த.. சுகமாக்கப்படுதல் சம்பவிக்கிறதான காரியங்கள் உண்மையானதான இருந்தது, ஏனென்றால் அவை உண்மையாகவே “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதன் மீது கட்டப்பட்டிருக்கிறது. அதினிமித்தமாக அவைகள் நிலைத்து நிற்கும். இப்பொழுது - இப்பொழுது, சிறிய ஞாயிறு பள்ளியானது.... ஒரு நிமிடம் நான் காத்துக் கொண்டிருக்கிறேன், அவர்கள் தங்கள் இடங்களில் தங்களை சரியாக பொருத்திக் கொள்ளும்வரை, நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக் கிறேன். ஆதலால் நாம் இப்பொழுது அமைதலாய் இருக்க முடியும். நாம் ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு நமக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது. 39இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய தவறுகளை தேவனிடம் அறிக்கையிட்டு, அவருக்கு ஊழியம் செய்வேனென்றும், உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாகவும் அவருக்கு வாக்குக்கொடுக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மேலும் மேய்ப்பனும் நானும் உங்களுக்காக ஜெபித்து, உங்கள் மீது எங்களுடைய கரங்களை வைக்கப்போகிறோாம். அப்பொழுது நீங்கள் விசுவாசித்தால், நிச்சயமாக நீங்கள் சுகத்தைப் பெற்றுகொள்ளுவீர்கள். 40கக்கதண்டங்கள் வைத்திருப்பவர்கள், காது கேளாதவர்கள், பேச முடியாதவர்கள், பார்வையில்லாதவர்கள், அவர்கள் எப்படியாக கடந்து வந்து, ஞாயிறு மத்தியானம் மேடைக்கு நடந்து வந்து, தங்களுடைய கக்கதண்டங்களை தூக்கி யெரிந்து போட்டு, மேடைக்கு வந்து பார்வையை பெற்று கொண்டவர்களாகவும், அவ்விதமான காரியத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நூற்றுக்கணக்கானவர்கள்.... நல்லது, நான் மிகவும் பெலவீனமானேன். அந்த இடத்தை விட்டு என்னைக்கொண்டு போகவேண்டிய சூழ்நிலை இருந்தது. சற்றே அங்கு நின்று கொண்டிந்தேன், அவர்கள் கடந்து போய் கொண்டிருந்தார்கள், பார்த்தீர்களா? 41அந்த வரிசையானது இங்கிருந்து. ஏறக்குறைய ஜெஃபர்ஸன்வில் பள்ளி வரைக்குமாக இருக்கலாம். அவ்வளவு நீளமான வரிசை. வரிசையில் வருவார்கள், அவர்களில் ஒருவர் கடந்துசெல்லும் போது, எந்தவிதமான சுகத்தை பெற்றுக்கொண்டார்கள் என்று எனக்கு தெரியாது. பாருங்கள்? ஏனென்றால் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில் அதை நம்பினவர்கள் வந்தார்கள். பாருங்கள் அது நடந்தேயாக வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் தலைகளை வணங்கியவர்களாக, நான் அவர்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவி செய்யுங்கள். கர்த்தராகிய இயேசுவே, இங்கு வியாதியாயும், மன வேதனையுள்ளவர்களாயும், உடல் வேதனையுள்ளவர் களாயும், எனக்கு எதிரே நின்று கொண்டிருக்கிற கூட்டத்தின் பிள்ளைகளை நாங்கள் உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். அவர்கள் நம்பிக்கை என்ற கட்டத்தை தாண்டியிருக் கிறார்கள், அவர்களில் அநேகர் அவ்விதமாக இருக்கிறார்கள். கர்த்தாவே மருத்துவரின் மூலமாக கிடைக்கும் சுகமாகுதல், விசேஷமாக இந்த கட்டிலின் மீது படுத்திருக்கும் இந்த மனிதன், அது உம்முடைய கிருபையாய் இருக்கக்கூடும் அல்லது இன்னும் சில நாட்களில் இந்த உலகத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். 42மேலும் சந்தேகமில்லாமல் பீடத்தண்டையில் நிற்பவர்களில் சிலர் இருதயத்தாக்குதல் அவர்களுக்காக காத்திருக்கிற நிலையில் இருப்பவர்கள், பலவித நோய்கள், மன வேதனையுடையவர்கள், அது ஒருவேளை அவர்களை கிழித்துப் போடக்கூடிய நிலையிலிருப்பவர்கள், அங்கு ஒரேயொரு காரியம்தான் இருக்கிறது. தகப்பனே, அது இந்த சரீரத்திலிருக்கும் ஐந்து புலன்களையும் தாண்டி சென்று அவர்களை இரட்சிக்க முடியும். அங்கே மருத்துவர்கள் உத்தமமாக முயற்சித்து, அவர்களுடைய ஜீவனை பாதுகாத்தார்கள் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை: வியாதிகள், புற்றுநோய், காச நோய், இருதய கோளாறு இன்னும் எல்லாவிதமான ஒட்டு போடப்பட்டதான காரியங்கள், குழாய்கள், மற்ற சாதனங்கள், மேலும் கிருமி நாசினிகள். சத்துரு கூட்டமாக கூடி அவர்களுடைய ஜீவனை எடுக்கப் பார்க்கிறான். 43கர்த்தாவே, நான் இதை வெளிப்படுத்தினேன். கர்த்தாவே அவர்களுக்காக உம்முடைய கருத்தை நான் விசுவாசிக்கிறேன். இன்றைக்கு என்ன சம்பவிக்கப் போகிறதென்று, இன்று காலையில் அந்த மனிதன் அந்நியபாஷையில் பேசி அதற்கு வியாக்கியானத்தை கொடுத்தார். இவர்களில் சிலர் அதை பெற்றுகொள்ளப் போகிறார்கள். கர்த்தாவே நிச்சயமாக. அது சரியே. நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது வேதத்தில் இவ்விதமாக எழுதியிருக்கிறது. சிறிய ஆடு மேய்ப்பவனாகிய தாவீது தன்னுடைய தகப்பனுடைய ஆடுகளை வனாந்திரத்தின் பின் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு சிங்கம் அவனுடைய தகப்பனுடைய ஆடுகளில் ஒன்றை பிடித்துக் கொண்டு போய்விட்டது. அந்த சிங்கத்திற்கு விரோதமாக எந்தவிதமான ஆயுதத்தோடு போக முடியும்? ஒரு தற்காலத்திய சுழல் துப்பாக்கியையோ அல்லது துப்பாக்கியையோ வைத்து அல்ல. 44ஆனால் சிறிய ஆடு மேய்ப்பவன் விசுவாசத்தோடு கவண்கல்லை எடுத்துக் கொண்டு அந்த சிங்கத்திற்கு பின்பாக சென்றான். அவன் அந்த சிங்கத்தை கொன்று அந்த ஆட்டை திரும்பவுமாக கொண்டு வந்தான். ஒரு கரடி வந்து ஒரு ஆட்டை பிடித்து சென்றது. அவன் அந்த கரடிக்கு பின்பாக சென்றான். அது அவனை தரையோடு கூட நொருக்கிப் போட்டிருக்கக்கூடும். அவன் அந்த கரடியின் உருவம் எவ்வளவு பெரிதென்று பார்க்கவில்லை அல்லது சிங்கத்தின் பெலன் எவ்வளவு பெரிதென்று பார்க்கவில்லை அல்லது அவனுடைய வேகத்தை பார்க்கவில்லை அல்லது அவனுடைய கவண்கல்லின் திறமையின்மையை பார்க்க வில்லை . 45ஆனால் இராஜாவாகிய சவுலுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தபோது, அவன் சொன்னான், “உம்முடைய ஊழியக்காரன் அவனுடைய தகப்பனுடைய ஆடுளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் உள்ளே வந்து ஒருஆட்டைப் பிடித்துக்கொண்டு போய்விட்டது. நான் அதற்கு பின்பாக சென்று அந்த ஆட்டை திரும்பவுமாக கொண்டு வந்தேன்”. “கரடியின் கைக்கும் சிங்கத்தின் தாடைக்கும் என்னை விடுவித்த தேவன், விருத்த சேதனமில்லாத இந்த பெலிஸ்தியனையும் என்னுடைய கரங்களில் தருவார்” என்று சொன்னான். அந்த கதை எப்படிப் போகிறதென்று நமக்கு தெரியும். அவன் எப்படி தன்னை காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரியவனாய் இருக்கிறவனை, ஒரு யுத்த வீரனுடைய தலையை அவன் வெட்டினான். ஒரு பெரிய மகத்தான மனிதன், மகத்தான இராஜாவாகிய சவுலை அது எவ்வளவாக ஸ்தம்பிக்க செய்தது. ஒரு சிறு பையன் ஒரு கவண்கல்லின் மேல் அவன் எவ்வளவாக தன்னுடைய விசுவாசத்தை வைத்திருந்தான். இல்லை, கவண்கல்லின் மீதல்ல, ஆனால் தேவனிடத்தில். 46இப்பொழுதும் கர்த்தாவே பீடத்தை சுற்றி நிற்கிறவர்கள், இந்த கட்டிலின் மேல் படுத்திருப்பவர், இவர்கள் தேவனுடைய ஆடுகள், அவனுக்கிருந்த சிறிய ஆடுகளைப்போல. அவர்கள் சிங்கம் என்று சொல்லப்படுகிற புற்று நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். காசநோய் என்று அழைக்கப்டும் கரடி, மற்ற வியாதிகள் அவர்களை வெளியே வெட்டி இழுத்து, அவர்களை துண்டுகளாக கிழித்துக்கொண்டிருக் கிறது. கர்த்தாவே நான் அவர்களுக்கு பின்பாக விசுவாச ஜெபம் என்னும் சிறிய கவண்கல்லோடு வருகிறேன். அது அதிகமாக இல்லை. ஆனால் அது என்ன செய்திருக்கிறது என்று எனக்கு தெரியும். எனக்கு தெரியும் அவர் இன்னும் அதே தேவன். இந்த காலை வேளையில் அவர்களை மறுபடியுமாக திருப்பிக்கொண்டு வரும்படியாக அவர்களுக்கு பின்பாக வந்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே நல்ல சரீர சுகம் என்னும் பசுமையான புல்லுள்ள நிழலான இடங்களிலும், சமாதானம் என்னும் அமர்ந்த தண்ணீரண்டையிலும் நடத்தி, அவர்களுடைய நடுக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து, உம்மை விசுவாசிக்கச் செய்யும். நீர் எனக்கு கொடுத்த சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொண்டு உள்ளே செல்லும்படியாக அவர்களுக்கு பின்பாக போகிறேன். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவர்களை எழுப்புவார். அவர்கள் ஏதாவது பாவம் செய்திருப்பார்களானால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்” 47பிதாவே சத்துருவை சந்திக்கும்படி நாங்கள் போகிறோம். சிங்கத்தை சந்திக்கும்படியாக, சத்துருவினுடைய ஒவ்வொரு உருவஅமைப்பு, புற்றுநோய் என்று அழைக்கப் படுவது, காசநோய், ஹாட்கின்ஸ் வியாதி, இருதய கோளாறு, இன்னும் மற்ற வியாதிகள். நாங்கள் அவனை கட்டி, ஆடுகளை தேவனுடைய வீட்டிற்கு திருப்பி கொண்டு வரும்படியாக நாங்கள் போகிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த இந்த கவண்கல்லை உபயோகப்படுத்த, இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் நாங்கள் போகிறோம். எங்களோடிரும், பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மை பயபக்தியோடு அணுகுகிறோம். நீங்கள் உங்கள் தலைகளை வணங்கியிருக்கும்படியாக நான் விரும்புகிறேன். நாங்கள் உங்களை எண்ணையால் அபிஷேகித்து வியாதியஸ்தர் மீது கரங்களை வைக்கும் படியாக நாங்கள் வருகிறோம். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் உங்களுடைய விசுவாசத்தை இந்த ஜெப வரிசையில் வையுங்கள். (“விசுவாசிக்க மாத்திரம் செய்” என்ற பாடலை பியானோ வாசிப்பவர் இசைக்கும்போது சகோ.பிரன்ஹாம் வியாதியஸ்தருக்கு ஜெபிக்க ஆரம்பிக்கிறார்.) 48(எல்லா வார்த்தைகளையும் வேறுபடுத்தி கண்டறியப்பட முடியவில்லை) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்....... அவளை திரும்பவும் கொண்டு வா...?.... இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, அவளை திரும்பவும் கொண்டுவா....?... அவளை திரும்பவும் கொண்டுவா....................... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே...?... திரும்பவும்.................. இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே....?... இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே....?... இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே...?............ விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், 49(நம்முடைய தலைகளை வணங்கியிருக்கும் போது, இப்பொழுது..... இப்பொழுது) விசுவாசிக்க மாத்திரம் செய், விசுவாசிக்க மாத்திரம்செய், விசுவாசிக்க மாத்திரம் செய்.... யாவும் கைக்கூடிடும், விசுவாசிக்க மாத்திரம் செய். ஓ, கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், ஓ,கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், யாவும்கைக்கூடிடும்..... (நாம் சற்றே நம்முடைய கரங்களை உயர்த்துவோம்) கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், ஓ, கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், ஓ, கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் யாவும் கைக்கூடிடும், கர்த்தாவே..... 50இப்பொழுதும் கர்த்தாவே, எழுந்திருக்க முடிந்தவர்கள், தங்களுடைய கரங்கயை உயர்த்தி அதை ஏற்றுக் கொண்டார்கள். கட்டிலில் படுத்துக்கொண்டிருந்ததான சகோதரன் தன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக எழுந்துநிற்கிறார். நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தாவே, அவர்கள் பசுமையான புல்லுள்ள நிழலான இடங்களில் மறுபடியுமாக சமாதானத்தோடும், அமர்ந்த தண்ணீரண்டையிலே சுகதேகிகளாக இருக்கும்படியாகவும் நடந்துக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் நாமத்தின் மூலமாய் அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென், அது சரி. சகோ. நெவில், உம்மிடத்திலிருந்து கேட்கும்படியாக நான் இங்கு அமர்ந்துக் கொள்ளப் போகிறேன்.